Tuesday, July 28, 2009

நகர்ப்புற வறுமை ஒழிப்புத்திட்டம்

அரசாங்கத்தின் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பலர் பயன்பெற்றுவருகின்றனர். இத்திட்டத்தின் நோக்கம் வறுமையில் வாழும்
குடும்பத்தினருக்கு வீட்டு வாடகை, பள்ளி போக்குவரத்து செலவு, மருத்துவ உதவி (சிறு நீரகப் பாதிப்புறறவர்கள்) போன்ற உதவிகளைச் செய்தல் ஆகும். அசகான் சட்டமன்றத்தில் வாழக்கூடிய ஏழை மக்களுக்கு இத்தகைய உதவிகள் இன்று ஞாலாஸ் ஜெப்ரொன் சேவை மையத்தில் வழங்கப்பட்டது. இன்று 38 குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் காசோலைகள் கொடுக்கப்பட்டன.

அசகானைச் சேர்ந்த குறன் என்பவர் சிறுநீரகச் சிகிச்சைக்கு ரிங். 12,000.00 ஆன காசோலையை மாண்புமிகு ஆர்.பெருமாள் அவர்களிடம் இருந்து பெறுகிறார்.

Monday, July 27, 2009

சிலம்பம்

தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் தற்காப்பு கலையாக இருந்தாலும், தொடர்ந்து அதன் பாரம்பரியம் தமிழர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தற்போது திருவிழாக்களில் சிறப்பு அம்சமாக இடம் பெறுவதையும் காணலாம். இந்த சிலம்ப விளையாட்டு அடுத்த ஆண்டு மே மாதம் 28 முதல் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை மலாக்காவில் நடைபெறவுள்ள பதின்மூன்றாவது சுக்மா போட்டி விளையாட்டுகளில் (SUKMA XIII 2010) விருப்ப விளையாட்டுகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது நமக்குப் பெருமையே.

Saturday, July 25, 2009

கிருஷ்ணா பலராம் சுதந்திர தின விழா

ஆயர் கெரோ மலாக்கா கிருஷ்ணா பலராம் இந்திய கலை கலாச்சார இயக்கம் 25.7.2009 இல் தங்களுடைய கட்டிட நிதிக்காக ஒரு கலை நிகழ்ச்சியை மலாக்கா ஹங்துவா மண்டபத்தில் இரவு 7.30 க்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மலாக்கா மாநில ம.இ.கா. தலைவர் ஆர். இராகவன் அவர்களும், செயலாளர் மாண்புமிகு ஆர். பெருமாள் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ம.இ.கா. சார்பாக கட்டிட நிதிக்காக ரிங். 5,000.00 கொடுக்கப்பட்டது.

ரெம்பியா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழா

மலாக்கா மாநிலத் தலைவர் டத்தோ ஆர். இராகவன் அவர்களும், செயலாளரும் அசகான் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு ஆர்.பெருமாள் அவர்களும் ரெம்பியா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திரத் திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு அதிகாரிகள் நியமனம்

மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைவதற்கு மாநில அரசு 2 சிறப்பு இந்திய அதிகாரிகளை நியமித்துள்ளது. மாநில அரசுக்கு நன்றியைக் கூறிக்கொள்ளும் அதே வேளையில், கிளைகளின் தலைவர்கள் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். தங்கள் வட்டாரத்தில் இருக்கக்கூடிய இந்தியர்கள் பிறப்புப் பத்திரம், அடையாளக் கார்டு, சொக்சோ, சமூக நல உதவி போன்ற பிரச்னைகளை எதிர்நோக்கி இருந்தால் உடனடியாக எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
  • திரு சத்தியமூர்த்தி 0123802075
  • திரு யோகாநந்தன் 0162080841