குறிப்பு : மக்கள் ஓசை - ஞாயிறு 23/8/2009

மலாக்காவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் புதிய தொற்றம். டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் முயற்சியால் உருவான இந்த 2 தமிழ்ப்பள்ளிகள் நமக்கு பெருமிதத்தைக் கொடுக்கின்றது.
மாண்புமிகு ஆர்.பெருமாள் அவர்களின் அலுவலகத்தில் இருந்து செயல்படும் குழுவினர் ம்லாக்கா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பிறப்புப்பத்திரம் இல்லாத மாணவர்களின் பிரச்னைகளைக் களைவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மாநில பதிவு இலாகாவைச் சேர்ந்த திரு யூசோப் அவர்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று நேர்முகப்பேட்டியை நடத்தியுள்ளனர். இதுவரை ஜாசின் தமிழ்ப்பள்ளி, புக்கிட் அசகான் தமிழ்ப்பள்ளி மற்றும் டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளிகளில் மட்டும் 18 பேர்களைப் பேட்டி கண்டுள்ளனர். தொடர்ந்து மெர்லிமௌ, அலோர்காஜா மற்றும் கெமுனிங் வட்டாரத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்குச் செல்லவிருக்கின்றனர்.